பக்கம்:தமிழக வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழக வரலாறு



உருவாகியிருக்கக் கூடும். இந்த வகையிலேதான் மொழியில் காணும் எழுத்துக்களின் வரி வடிவம் உருவாகியிருக்கும். சிந்துவெளி நாகரிக மொழியின் வரி வடிவம் கி. மு. 2500க்கு முற்பட்டதன்றோ! மொழி மனித வாழ்வில் எப்படி ஒரு திருப்பு மையமாய் அமைந்ததோ, அப்படியே எழுத்துக்களின் வரி வடிவம் மற்றொரு திருப்பு மையமாய் அமைந்து நின்றது எனலாம். இயற்கையைக் கண்டு கற்ற மனிதன், எழுத்தின் வழியும் நூல் வழியும் பல கற்கத் தொடங்கினான். எனினும், எழுத்துக்களை வடிப்பதும் கற்பதும் அத்துணை எளியவல்ல. இன்று நாம் பெற்றிருக்கும் அத்துணைப் பெருஞ்சாதனைகளுள் ஒன்றும் அன்று இல்லை. எனினும், எப்படியோ முயன்று எழுத்துக் கூட்டி மொழியாக்கிப் பேசியதோடு, வரி வடிவம் தீட்டி உருவாக்கி உலகில் கலந்து வாழ ஒரு சிறந்த சாதனமாக மொழியினை ஆக்கிக் கொண்ட அன்றைய மனிதனைப் பாராட்டாதிருக்க முடியுங்கொல்!

மனிதன், காலம் செல்லச் செல்லப் பல உண்மைகளை அறிந்தான். தன்னைச் சுற்றிய பொருள்களை அறிந்ததோடு வான வட்டத்தையும் நோக்கி ஆராய்ந்தான். வானசாத்திர நூல்கள் இலவேனும், வானவெளிபற்றி அறிந்த பல குறிப்புக்கள் இருந்தன என்பதை எகிப்திய வரலாறும் தமிழ் இலக்கியங்களும் நமக்குப் புலப்படுத்துகின்றன. இவைகளைத் தவிர மருத்துவத் துறையும் அன்று அவன் அனுபவத்தில் வந்த ஒன்று. வாழ்வதே இன்ப துன்பங்களுக்கு இடையிலேதானே! ஆதி மனிதனும் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனுங்கூட நோய் பெற்றுத் துன்புற்றுப் பின் விடுதலை பெற்றிருப்பான். கி.மு. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை வைத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/92&oldid=1375647" இலிருந்து மீள்விக்கப்பட்டது