பக்கம்:தமிழக வரலாறு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

91


மும் (Surgery) பிற வைத்திய முறைகளும் இருந்தனவாம்[1] நாட்டுக்கு நாடு மருத்துவங்களும், வான சாத்திரங்களும் சோதிடங்களும் மாறி மாறிச் செல்லும் வழக்கமும் இருந்தன. அளவு முறை (Geometry) இந்திய நகரங்களின் கி.மு. 2500ல் இருந்ததாம். பல அறிவியல் வளர்ச்சிகள் கி.மு. 3000க்கும் 1000க்கும் இடையில் வளர்ந்தன என்று கூறுவது பொருந்தும். கலிலியோ போன்ற மேலை நாட்டு வானாராய்ச்சியாளர் ஆராய்ச்சிகளும் ‘சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென் போரும் உளரே’ என்ற புறநானூற்று அடிகளும் மிகு பழங்காலத்திலேயே தமிழ் நாட்டிலும் பிற நாகரிகம் வளர்ந்த நிலபகுதிகளிலும் நெடுங்காலமாக வானாராய்ச்சியும் பிறவும் வழக்கத்தில் இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

புதை பொருள்கள் :

இனி இறந்த மக்களைப் புதைத்து வைக்கப்பட்ட தாழிகளே நமக்குப் பழங்கால மனித வாழ்வை ஓரளவு விளக்கிக் காட்டுகின்றன என்பதை முன்பு கண்டோம். அத்தாழிகளின் அமைப்பும், அவற்றின் வழிக் களிமண் பண்டங்கள் செய்யப் பெற்ற திறனும், அவற்றின்மேல் பூசப்பெற்ற நிறங்களும், சித்திரங்களும், அவற்றின் காலத்தையும், அக்காலத்து மக்களின் வாழ்வு, வளம் வாழ்க்கை வகை முதலியவற்றையும் ஒருவாறு விளக்கிக் காட்டுகின்றன எனலாம் இனி, அத்தாழிகளில் புதையுண்ட எலும்புக் கூடுகளின் தன்மை, ஆயுட்காலம் முதலியவற்றைக் கண்டே தமிழ் நாட்டிலும், எகிப்து


  1. Man Makes Himself, by Golden Childe, P. 222
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/93&oldid=1357801" இலிருந்து மீள்விக்கப்பட்டது