பக்கம்:தமிழக வரலாறு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

95


என்பது ஒருதலை. எனினும், இன்று வரை இந்திய வரலாற்றை எழுத முற்படும் ஆசிரியர்களில் யாரும் தென்னாட்டு வரலாற்றில் அக்கரை கொண்டதாகப் புலப்படவில்லை. அக்கரை கொண்டால் பயன் உண்டு.

வரலாற்று எல்லைக்கு உட்படாத காலத்துக்கு முன் சிறந்திருந்த பூம்புகாரும் முசிறியும் தொண்டியும் பிற பட்டினங்களும், பிற்காலத்தில் மாமல்லபுரம் போன்றவையும் தமிழ்நாட்டு வரலாற்றின் தொன்மையை விளக்கும் மைல் கற்களாய் அமைகின்றன. ஒவ்வொரு கல்லிடமும் சிறிது நேரம் நின்று சென்றால், அவை பேச்சு எத்தனை எத்தனை உண்மைகள் நமக்கு விளங்கும் என்பதை உண்மையில் அவற்றை அறியும் அவாவுடையார்க்கே புரிந்துகொள்ள இயலும். மற்றவர்கள் அக்கற்களையே களைந்து எறிந்து விட்டு, வழியும் அறியாது, தட்டித் தடுமாறி முட்டிக்கொள்வர் ஆம். தமிழ்நாட்டு வரலாற்றை நல்ல முறையில் ஆராய உண்மையில் தமிழ்ப் பண்பும், தமிழ் உள்ளமும், ஊற்றுப் பெருக்கெடுத்தோடி வரும் அவாவும் தேவை. இன்றைய தமிழ் மாணவர் ஒருவாறு அத்தகைய நற்பண்புகள் அமையப் பெற்றிருக்கின்றனர். எனவே, வருங்காலத்தில் தமிழக வரலாறு சிறந்து நிற்கும் என்பது ஒரு தலை.

இதிகாச வரலாறுகள் :

வடக்கே மெளரியப் பேரரசுக்குமுன் திட்டமான வரையறுத்த வரலாறு கிடையாது. தமிழகத்துக்கும் அப்படியே என்பர். எனினும், அந்த மெளரியர் காலத்திலிருந்து வடக்கைத் தென்னாடு நன்கு அறிந்திருந்ததென்பது தேற்றம். இந்த வரலாற்றுக்கு முன் வழங்கும் புராண இதிகாசக் கதைகளும் வடக்கையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/97&oldid=1357661" இலிருந்து மீள்விக்கப்பட்டது