இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எடுத்து வைத்த காரணம் எதுவும் ஏற்புடையது அன்று, தழும்பன் கோசர் இனத்தவன் அல்லன்.
மேலும், தழும்பன் கோசர் மரபினன் அல்லன் என்ற இம்முடிவை சென்னை அருணா பப்ளிகேஷன்ஸ் 1960ல் வெளியிட்ட ‘தமிழகத்தில் கோசர்கள்’ என்ற என் நூலில், ‘பரணர் அவனை (தழும்பன்) வாய் மொழித் தழும்பன்’ 23 எனச் சிறப்பித்து அழைத்துள்ளது ஒன்றையே கொண்டு இவனையும் கோசனாக்கி விடுவர் சில வரலாற்று ஆசிரியன்மார்24 என எழுதி அன்றே கூறியுள்ளேன்.
94