பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை நிரலே கூறும்போது, பறம்பின் கோமான் பாரி; வல்வில் ஓரி, காரி ஊர்ந்த மலையன்; என்ற மூவரைக் கூறியதற்கும், 'பெருங்கடல் நாடன் பேகன்' மோசி பாடிய ஆய்; கொள்ளார் ஒட்டிய நள்ளி' என்ற மூவரைக் கூறியதற்கும் இடையில் வைத்து, அதியமானைக் கூறும் இடத்தில் ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல், கூவிளம் கண்ணி எழினி’ என எழினி என்றே அழைத்திருப்பது காண்க. மேலும், பொய்யா எழினி’ என்று அரிசில் கிழாரும் 19 அதியர் கோமான் கொடும் பூண் எழினி' என்று ஒளவை யாரும், அவனை எழினி என அழைத்திருப்பதும் காண்க தேமுது குன்றத்துக்கு உரியோன் ஆகிய கண்ணன் எழினி என்பான் ஒருவனையும் சங்கப் பாடல் ஒன்று21 அறிமுகம் செய்துள்ளது. ஆக, 'எழினி' என்பதைத் தம் பெயரோடு இணைத் துக் கொண்டிருப்பவர், ஆதன் எழினி ஒருவன் மட்டும் அல்லன்; வாட்டாற்றானும், தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியன் பால் தோற்றோனும், அதியர் கோமான் அஞ்சியும், தேமுது குன்றத் தானும், என வேறு நால் வரும் கூடஎழினி என்பதனைத் தம்பெயரோடு கொண்டுள் ளனர். அவர்களுள் எவரும் கோசர் அல்லர். மாறாக, தலையாலங்கானப் போர்ப் பாட்டுடைத் தலைவனின் படைமறவர் கோசர் என்பது முடிந்த முடிவு. அப் போரில் ஓர் எழினி தோன்றான் என்றால், அவன், கோசர் குலத்தவனாக இருத்தல் இயலாது. - வாட்டாற்றான் பெயரில் 'எழினி’ என்பதோடு சேரர் குலத்தைக் குறிக்கும் 'ஆதன்' என்றும் இருப்பதால் அவன் 101