பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரர் குலத்தவனே அல்லது, கோசர் குலத்தவன் ஆகான் பெருஞ்சித்திரனாராலும் அரிசில் கிழாராலும், ஒளவை யாராலும் பாராட்டப் பெருவான் எழினி என அழைக்கப் பெற்றாலும், அவன் அதியர் குலத்தவன் என்பதை அவர் களே உறுதி செய்துள்ளனர்; ஆகவே அவனும் கோசர் மரபினன் அல்லன். . கண்ணன் எழினி என்பானும், தேமுது குன்றத்தைச் சேர்ந்தவன்; ஆகவே ஆகவே அவன் ஒரு மலை நாட்டகத் தானே அல்லது, கோசர்களின் வாழிடங்களாகக் கருதப் பெறும் சோழ நாட்டுக்கடற்கரையைச் சேர்ந்தவன் அல்லன் ஆகவே, அவனும் கோசர் குலத்தவன் அல்லன். ஆக, 'ஆதன் எழினி என்ற பெயரை வைத்து, அவனைக்கோசர் மரபினன் எனத் துணிவதற்குச் சிறு ஆதாரம் தானும் இல்லை. . ஆக, திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள், ஆதன் எழினியைக் கோசர் மரபினன் எனக் கொள்வதற்கு, அகச் சான்றாக அவர் கொள்வதற்கு இருப்பன, மேலே அகம்-216, மற்றும் அகம் 90 பாடல்களே. இவ் விருபாக் களை மட்டும் அகச் சான்றுகளாகக் கொண்டு, ஆதன் எழினியை, கோசர் குலத்தவன் எனக் கொள்வது பொருந் தாது; மாறாக, அப் பாக்களால் அறியக் கூடிய செய்தி கள் இன்னின்ன மட்டுமே என்பதும் ஆண்டே விளக்கப் ، تقي ـا حسا لا ஆதன் எழினியைக் கோசர் மரபினன் என்பதற்குத், தி ரு வா ளர். ரா. இராகவையங்கார் அவர்களுக்குக் கிடைத்த கடைசி ஆயுதம், அவ் வெழினி, போர்க்களத்தில் எதிரியின் களிற்றுப் படைமீது வேல் எறிந்து அவற்றை வருத்திக் கொல்வன் எனப் பொருள்படவரும், - - - 102