“எறி விடத்து உலையாச் செறிசுரை வென் வேல் ஆதன் எழினி அரு திறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம்' என்ற வரிகளே. ‘இவன், வேலை, எதிர்த்த யானையின் அரிய மார் பில் அழுந்தும்படியெறிந்தனன்' என்பதும் அறியப்படுவன இதனால் கோசர் களிறு எறிந்து வரும் பெரு வீரராக விளங்கியது தெரியலாம்' என அவர் கூறுவது காண்க. மேலும், இக் கோசகுலம் எதிர்த்த படையில் யானை யையல்லது எறியேம் என்று திவ்ய சபதஞ் செய்து ஹஸ்தி கோசம் என்னும் ஒரு குழுவாகவும், எதிர்த்த வீரரை அல்லது எறியேம் என்று சபதஞ் செய்து வீரகோசம் என் னும் குழுவாகவும் வழங்கப்படும்' என்றும் கூறியிருப்பது காண்க . . தழும்பன் கோசர் குலத்தவன் என்பதற்குக் காட்டப் பட்ட காரணங்களுள் இதுவும் ஒன்று. அக்காரணம் பொருந்தாது என்பதற்கான விளக்கங்களை ஆண்டே கொடுத்துள்ளேன்; மீண்டும், ஈண்டுக் கூறத் தேவை இல்லை. ஆக ஆதன் எழினி என்ற அவன் இயற் பெயர் கொண்டோ செல்லூர் நியமம் என்ற ஊர்களைக் கொண்டோ, அவன் வேழம் எறிந்தது கொண்டோ அவ னைக் கோசர் மரபினன் எனக்கொள்வது சிறிதும் பொருந் தாது என்பது உறுதி செய்யப்பட்டது. ஆதன் எழினி கோசர் குலத்தவன் அல்லன். சென்னை அருணா பப்ளிகேஷன்ஸ் 1960ல் வெளியிட்ட 'தமிழகத்தில் கோசர்கள்' என்ற என் நூலில் செல்லுர்க் 103
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/113
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை