பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குக் கிழக்கே கடலையடுத்திருந்த நியமம் என்ற நகரை வாழிடமாகக் கொண்டிருந்தனர் கோசர் சிலர் என்ற செய்தியையும் செல்லூர்க் காவற் காட்டை அடுத்துள்ள மணல் வெளிகளில் கோசர் குல இளைஞர் மலர்க் கண்ணி கட்டி மகிழ்ந்து ஆடுவர் என்ற செய்தியையும் கொண்டு, அவ் வாதன் எழினியைக் கோசனாக்கிக் காண் பாரும் உள்ளனர்27 எனக் கூறியிருப்பதன் மூலம், ஆதன் எழினி கோசர் மரபினன் அல்லன் என்பதை அன்றே தெளிவாக்கியுள்ளேன்.

104