பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனிரைகட்கு நீர் அளித்து ஒம்புவான் வேண்டி கொங்கர் ஆங்காங்கே ஆழ்ந்த பல கிணறுகளைத் தோண்டி வைத்தி ருந்தனர். கொங்கர் சிலர் தம் ஆனிரைகளை மேய விடும் இடங்களுக்கு, அவை ஆங்குச்செல்வதன் முன்னர்ச் சென்று உடன் கொண்டு சென்ற கணிச்சி முதலாம் கருவிகளின் துணை கொண்டு தீப்பொறி பறக்குமாறு கற்களைப் பையப்பைய உடைத்தெறிந்து கிணறுகளைத் தோண்டுவர் அவ்வாறு தோண்டிய கிணறுகள் தாமும் பெருக நீர்சுரவா, நீர் சிறிதே சுரத்தலின் அந்நீரை முகக்க கொங்கர் பெரிய பெரிய முகவைகளைக் கொள்ளார். மிக்க ஆழத்தில் சிறிதே ஊறிக் கிடந்த அந்நீரை நீண்ட கயிறுகளில், சிறு கோவைகளைக் கட்டி முகப்பர் நீர் வேட்கை மிக்க அவர்தம் ஆனிரைகளை, உண்ணும் நீர் வேட்கை, உந்த, செந்துள் பரக்க விரைந்தோடிச் சென்று அச்சின்னிரைப் பலவும் ஒன்று கூடி மொய்த்து நின்று பருகும் கொங்கர் தம்ஆனிரைகளை ஒம்பும் அரியசெயலை அறியத் துணைபுரிவன கீழே வரும் பாடல்கள். "தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து கல்லுறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல் மண்டிய வன்புலம் துமியப் போகிக், கொங்கர் படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள் அகலிடு விசும்பின் ஊன்றித் தோன்றும் . × . . -குடவாயிற் கீரத்தனார் கேண் பரல் முரம்பின் ஈர்ம்படைச் கொங்கர் ஆ பரந்தன்ன செலவு’’’ - - -அரிசில் கீழார் 108