பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டின் கிழக்கு எல்லையும், சோழ நாட்டின் மேற்கெல்லையும் பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையும் கூடும் இடமாக இருந்தமையால், அந் நாடுகளை ஆண்டிருந்த மூவேந்தர் களும், அக் கொங்கரை வெற்றி கொள்வதில் ஆர்வமிக்கவ ராயினர். கொங்கரை வெற்றி கொண்ட சேர வேந்தன் : பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் மகனும், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் உடன் பிறந்தோனுமாகிய, பல்யானைச் செல் கெழு குட்டுவன், தன் நாட்டுக்கு அணித்தாக, கொற்றம் மிக்க கொங்கரை வாழ விடல் தன் நாட்டிற்குக் கேடாம் எனும் உண்மை உணர்ந்த உரவோ னாதலின், அவன் அக் கொங்கரை வென்று அவர் நாட் டைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டான். அன்று முதல் கொங்கு நாடு, சேர நாட்டின் ஒரு பகுதியாகவே ஆகி விட்டது, சேர வேந்தர்களும் கொங்கு நாட்டுக் கோவேந்தர் என்னும் பெயர் பெறலாயினர் பல்யானைச் செல் கெழு குட்டுவனின் தம்பியாகிய இளஞ் சேரல் இரும் பொறை, கொங்கர் கோ' என அழைக்கப் பெற்றான். இவ்வரலாறு உணர்த்துவன பின் வரும் பதிற்றுப் பத்துப் பாடல்கள். 'ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழு தானை வெருவரு தோன்றல்' - பாலைக் கெளதமனார். 'நாரரி நறவின் கொங்கர் கோவே' -பெருங்குன்றுார் கிழார். கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே'8 -பெருங்குன்று ர் கிழார். 110