பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலுத்துவார் என்றவாறாம். அடியார்க்கு நல்லார் கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்றது வேந்தர் வழியினராய்க் கொங்கில் வதிகின்ற கோசரைக் குறித்ததாகும். இவர், இங்ங்னங் கருதியது மேல்வரந்தரு காதையில் இவரைக் குடகக் கொங்கர்’ எனக் கூறியது பற்றி என்று துணியலாம். குடகக் கொங்கர் என்றவரைக் குடமலை நாட்டாரா யிருந்து கொங்கிற் குடியேறி வதி கின்ற இளங்கோ வழியினராகிய கோசர் என இவர் கருதி னராவர்,' என்று கூறுவது காண்க, மேலும் அதே நூலில், வரந்தருகாதையுள்; ஆரிய மன்னர் முதலாகக் கயவாகு வேந்தனிறுதியாகக் கூறிய அரசர்களுக்கிடையே, குடகக் கொங்கர்’ என இவரைக் (கோசரை) கூறுதலான், இவரையும் (கோசர்) அவர் அரச ராகக் கருதியே இளங்கோவாகிய கோசராக வரைத்தன ரெனத் தெளியலாம் என்றும் பிறிதோரிடத்தில் செங்குட் டுவன் கொங்கிற் கோயில் எடுத்தது கண்டு கொங்கராய்க் குடகிலுள்ளாராகிய கோசரும் த | ங் க ள் தங்கியுள்ள குடமலை நாடுகளிலே கண்ணகிக்கு விழவும் சாந்தியும் செய்ய விழைந்தனர் என்பதே இயைபுடைத்தா மென்க'19 என்றும், அடுத்து, இவர் (அரும்பத வுரைகாரர்) கருத்துப் படி நோக்கிற் கொங்கிளங் கோசர் என்பாரைக் குடகக் கொங்கர் என வரந்தரு காதையில் விளக்கியதனால், கொங்கினின்று குடகப் புறத்துக் குடியேறிய இளங்கோசர் என்பதே திரண்ட பொருளாகும் என்ப" எனவும், அவர் கூறுவது காண்க. இதனால் கொங்கர் வேறு, கோசர் வேறு அல்லர் ; கொங்கரும் கோசரும் ஒருவரே என்று திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் முடிவாதல் தெரிகிறது. - - இனி திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்களின் கூற்றினை ஆராய்வோம். திரு. அய்யங்கார் அவர்கள், தம் 115