பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுவி எடுத்த விழாவுக்குச் சென்றார்களா, என்றால் இல்லை, விழா எடுத்தவர்களுள் கயவாகு ஒருவன் மட்டுமே வஞ்சிக்துச் சென்றிருந்தான். அதே போல், செங்குட்டுவன் எடுத்த விழாவிற்கு வந் திருந்தோர் அனைவரும் தங்கள், தங்கள் நாட்டகத்தே விழா எடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. விழா விற்கு வந்திருந்தவர்கள் சிறை வீடு பெற்ற ஆரிய மன் னர், சிறை வீடு பெற்ற தமிழக மன்னர் குடகக் கொங்கர் மாளுவ வேந்தர் கயவாகு? ஆகியோர் தான் அவர்களுள் கயவாகு மட்டுமே தன் நாட்டகத்தே விழா எடுத்தான், ஆக உரை பெறு கட்டுரையில் வரும், கொங்கு இளங் கோசர் என்ற தொடரிலும், வரந்தரு காதையில் வரும், குடகக் கொங்கர்’ என்ற தொடரிலும் முறையே கொங்கு” கொங்கர் என்ற பெயர்கள் இடம் பெற்றிருப்பது ஒன் றையே கொண்டு கொங்கரைப் போலவே கோசரும், குடகு நாட்டில் வாழ்ந்தவர் அதுமட்டும் அன்று கொங்க ரும், கோசரும் ஒருவரே எனக் கோடல் பொருந்தாது. மேலும், குடகக் கொங்கர் ' என்ற சிலப்பதிகாரத் தொடரும், கிணறுகள் தோண்டி, ஆனிரை ஓம்பும் கொங் கரின் தொழில்களை விளங்கக் கூறும், அகநானூறு பதிற் றுப் பத்து’ பாடல்களும், கொங்கர் வாழிடம் கடற்கரை யைச் சார்ந்தது அன்று; செந்தூள் பறக்கும் மேட்டு வன் புலம் என்பதையே உணர்த்தும். ஆய் அண்டிரன் அவர் களைக் குடகடல் ஒட்டினான்? என்றால் கொங்கர் வாழி டம் கீழ்க் கடற் கரையைச் சார்ந்திருந்தால், அச் செயல் அவனால் எளிதில் முடிந்திருக்காது. கொங்கர் மேலைக் கடலைச் சார்ந்து இருந்தமையினாலேயே அது அவனால் எளிதில் முடிக்கப்பட்டது. . ஆகவே, கொங்கர் வாழிடம், திருவாளர் ரா. இராக வையங்கார் அவர்களே ஒப்புக் கொண்டுள்ள 21, கோசர் 117