பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விடமா கியகீழ்க்கடலைச் சார்ந்தது அன்று. இவ்வகை யில் நோக்கினும், அதாவது குட நாட்டில் வாழ்பவர் கொங்கர் குண நாட்டில் வாழ்பவர் கோசர் என்ற வகை யில் நோக்கினும் கொங்கரும் கோசரும் ஒருவராதல் எனப் பொருந்தாது என்பது உறுதியாம். - சென்னை அருணா பப்ளிகேஷன்ஸ். 1960ல் வெளி யிட்ட தமிழகத்தில் கோசர்கள்' என்ற என் நூலில், திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள் கூறியிருக்கும் கருத்தைப் பின் வருமாறு கூறி மறுத்துள்ளேன். - "கொங்கு நாட்டிற்கு உரியவர் கொங்கரே என்பதிலும் கொங்கு நாட்டில் வாழ்பவர் கொங்கரே ஆதல் வேண்டும் என்பதிலும் சிறிதும் ஐயம் இல்லை, என்றாலும், கொங் கிற்கு உரியவராகிய கொங்கர், குடகடற்கரை நாட்டிற்குத் துரத்தப்பட்டனர் என்பதற்கு இறவா இலக்கியச் சான்று ஒன்றும் இருக்கிறது. வேளிர் தலைவனும், வள்ளலுமா கிய ஆய் அண்டிரனைப் பாடிய உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்ற புலவர், பாடிய பாட்டு ஒன்றில்: அவன் கொங்கரைக் குடகடற் பகுதிக்கு ஒட்டிய செய்தி உரைக் கப்பட்டுள்ளது. ஆக, தங்கள் வாழிடமாம் கொங்கு நாட் டை விட்டுக் கொங்கர், குடமலை நாட்டிற்குச் சென்றுவிட அவர் விட்டுச்சென்ற கொங்கு நாட்டில், அதன் அண்டை நாடாம் துளு நாட்டில் வாழ்ந்திருந்த கோசர் குடியேறினர் எனக் கொள்வதால், எத்தகைய வரலாற்று இடுக்கணும் இடம் பெறாமை உணர்க. மேலும், செங்குட்டுவன், வஞ்சி மாநகரில் எடுத்த விழா விற்கு வந்திருந்தவர், ஆரிய மன்னர் சினறவீடு பெற்ற மன்னர், குடகக் கொங்கர், மாளுவ வேந்தன், கயவாகு முதலியோராகும். கண்ணகிக்குத் தங்கள் நாட்டகத்தே விழா எடுத்தோர், கொற்கை ஆண்ட வெற்றி வேற் செழி யன், கொங்கிளங் கோசர், கயவாகு சோழன் பெருங் 118