அதையடுத்து, "வாட்டாற்றுக்கும், செல்லிக்கும் மலைப் புறமே கூறாமையால், இது கடன் மலைநாட்டுத் திருமால் திருப்பதி யாகாமை நன்குணரலாம்' என்று மு டி வு கூறுகிறார். ஆக, கோசர் வாழிடம், சோணாட்டுக் கடற்கரை நகரங்களே அல்லது, குடக நாடு அன்று என்பதை திருவா ளர் ரா. இராகவையங்கார் அவர்களே உறுதிசெய்துள்ளார் கோசர் வாழிடம், கீழ்க் கடற்கரையைச் சேர்ந்த செல்லூர்க்கு அணித்தான நியமம் எனக் கூறும் அதே சங்க இலக்கியங்கள், கோசரைக் கொங்கு நாட்டைச் சேர் ந் தவர் என்றும், மேலைக் கடற்கரையைச் சேர்ந்த மங்க ளுரை நடுவிடமாகக் கொண்ட் துளுமொழி வழங்கும் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், குமணனுக்கு உரியதாக அகத்திலும், புறத்திலும்,' கூறப்பட்டதும் அவனுக்கு முன்னமோ அல்லது பின்னரோ, பிட்டங் கொற்றன் என் பவனுக்கு உரியதாகக் கூறப்பட்டதும்,சி ஆகிய மேலை நாட்டின் கண்ணதான குதிரை மலைக்கு அணித்தாக வாழ்ந்திருந்து, கோசர் படைக்கலப் பயிற்சி பெற்றனர்.49 என்றும் கூறுவதால், கோசர் மேலைக் கடலைச் சார்ந்த இடத்தில்தான் வாழ்ந்தனர் எனக் கோடல் வேண்டி நேரா தோ, நேராது; நிச்சயமாக; அதற்கான காரணமும் விளக்கமும் இதோ : - கோசர், முதுகோசர் என்றும்' இளங்கோசர் என்றும்.45 இருவகைப் பட்டே வாழ்ந்து வந்தனர், அன்னி மிஞ்லி என்பாளின் தந்தை மேய்த்து வந்த ஆனிரை, முதுகோசர் விளைத்திருந்த பயற்றங்கொல்லையுள் புகுந்து மேய்ந்து விடவே, அம் முதுகோசர், அச்சிறு பிழைக்கு, அன்னி மிஞிலியின் தந்தை கண்களையே போக்கி விட்டனர் அக் கொடுஞ் செயல் புரிந்தாரைப் பழிக்குப் பழி வாங்காது விடேன் என வஞ்சினம் கூறி அது செய்து முடிக்க வல்லான் அழுந்துார்த் திதியனே என்பது அறிந்து, அவன் பால் 121
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை