பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கீழ்நீரான் மீன் வழங்குந்து; மீ நீரால் கண்ணன்ன மலா பூக்குந்து கழிசுற்றிய விளை கழனி, அரிப்பறையால் புள்ளோப்புந்து நெடுநீர் தொகூஉ மணல் தண்கால் மென்பறையால் புள் இரியுந்து நனைக் கள்ளின் மனைக் கோசர் திந் தேறல் நறவு மகிழ்ந்து தீங்குரவைக் கொளைத் தாங்குந்து; உள்ளிலோர்க்கு வலியாகுவன்; கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்; கழுமிய வென்வேல் வேளே, வள நீர் வாட்டாற்று எழினி ஆதன்; கினை யேம் பெரும! கொழுந்தடிய சூடென்கோ! வளநனையின் மட்டு என்கோ! குறுமுயலின் நிணம் பெய்தந்த நறு நெய்ய சோறு என்கோ ! . திறந்து மறந்த கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு என் கோ! அன்னவை பல பல......வருந்திய இரும் பேரொக்கல் அருந்து எஞ்சிய அளித்து உவப்ப ஈந்தோன்' இப்பாட்டால் நாம் அறியக் கூடியன இதோ: வளம் நிறைந்த பேரூர் வாட்டாறு : அந்நாட்டு நீர் நிலை களின் கீழிடமெல்லாம் மீன்களாலும், மேலிட மெல்லாம் மலர்களாலும் நிறைந்து கிடக்கும். வடிகால்களால் சூழப் பெற்ற அந்நாட்டு நெல்விளைநன் செய்கள்,பறையறைந்து ஒட்டுமளவு, பறவைகள் கூட்டமாகக் கூடு கட்டி வாழும் வளம் உடையன; . * - 128