14. குறும்பியன் என்ற பெயரில் யாரேனும் ஒருவன் இருந்தனனா? அவன் கோசனா? அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1951ல் வெளியிட்ட 'கோசர்’ என்ற தலைப்புள்ள ஓர் சிற்றாராய்ச்சி நூலில், திருவாளர், ரா. இராகவையங்கார் அவர்கள், குறும்பியன் எ ன் ற தலைப்பின் கீழ், ‘இவன், மறங்கெழுதானைக் கொற்றக் குறும்பியன் என்பதனாற், சிறந்த படையுடைய னென்பதும், அப்படையாலெய்திய கொற்றமுடையனென் பதும் அறியப்படும். இவன் திதியனொடு துணையாய் நின்று அன்னி மிஞிலி துயர் கேட்டனன் என்பதனான் இவ னுங்கோசனென்றே துணியப்படுமென்க’ எனக் கூறியதன் மூலம், குறும்பியன் என்ற பெயருடையான் ஒருவன் இருந் தான். அவனும் ஒரு கோசன் என முடித்துள்ளார், அவர். குறும்பியன் என்ற சொல், ஒரு தனி வீரனைக் குறிப் பதாகவே கொண்டால், அன்னி மிஞலி, திதியன்பால் முறையிட்டது போலவே, அக் குறும்பியன் பாலும் முறை யிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருவர் பாலும் முறை யிட்டிருப்பளாயின், குறும்பியன், திதியன் ஆகிய இருவர் பாலும் எனப் பொருள்தரவல்ல திதியர்க்கு எனப் பன்மை குறிக்கும் சொல் ஆளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஆளப்படவில்லை; மாறாக திதியன் ஒருவனை மட்டுமே குறிக்கும் வகையில், ஒருமை விகுதியால் திதிய னுக்கு எனப் பொருள் படும் திதியற்கு உரைத்து என்று தான் ஆளப்பட்டுளது. ஆகவே முறையிடப்பட்டவர் இரு வர் அல்லர்; ஒருவரே; அவன் திதியன் மட்டுமே; குறும் 132
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை