பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பியன் என்பான் எவனும் கண்ணுக்குப் புலப்பட்டிலன் என்பது உறுதி ஆகிறது. - திருவாளர்கள் நாவலர். ந.மு வேங்கடசாமிநாட்டார் கரந்தைக் கவியரசு. ஆர். வேங்கடாசலம் பிள்ளை ஆகி யோர் கருத்தும் இதுவே. பாகனேரி த. வை. இளைஞர் தமிழ்ச் சங்கத்தின் 12வது வெளியீடாக 1944ல், பாகனேரி திரு. வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்ட அகநானூற்றுக்குத், திரு. நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு அவர்களும் கூட்டாக எழுதிய விளக்கத்தில், "மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து’’ என்ற தொடர்களுக்கு, வீரம் பொருந்திய படையினைக் கொண்ட வெற்றி பொருந்திய குறும்பியனா கிய போர்த்திறம் வாய்ந்த நல்ல குதிரையையுடைய திதி யன் என் பானுக்குக் கூறி' எனப் பொருள் கூறியிருப்பது காண் க. - - ஊர் முது கோசர் கோட்டத்தை அடக்க முனைந்த அன்னி மிஞலி அதற்கு ஏற்புடைய பெரு வீரன் ஒருவன் துணையையே நாடுவள். அவள் திதியனை நாடினாள் என்றால் அவன்பால், அதற்கேற்ற பெரியபடை அப்படை பாடி கொள்ளற் கேற்ற கொற்ற மிகு கோட்டை, போர்த் திறம் வாய்ந்த குதிரை ஆகியன இருத்தல் வேண்டும் என உணர்ந்தாள். திதியன்பால் அவ்வளவும் இருக்கக் கண்டே, அவனை நாடினாள். கொற்றம் என்ற சொல் வெற்றி எனப் பொருள் படும். கொற்ற வேந்தே'; கொற்ற வெண்குடை' என்ற தொடர்களைக் காண்க. அதே போல், 'குறும்பு’ என் பதும், அரண் என்னும் பொருள் உடையது. ‘கொடுவில் எயினர் குறும்பு' 'குழுஉக் களிற்றுக் குறும்பு' 'குறும்பல் 133