பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறும்பு’9; ‘வில் இருந்த வெய் குறும்பு’10 என்ற தொடர்களைக் காண்க.

ஆக, அத்தொர்டகளுக்கு, வீரம் செறிந்த படையினையும், வெற்றிமிக்க அரண்களையும், போர்ப்பயிற்சி வாய்ந்த குதிரையினையும் உடைய திதியன் என்பதே கொள்ளும் பொருளாம்; உண்மைப் பொருளாம். ஆக, அத்தொடரில் குறும்பியன் என்பான் எவனும் ஒளிந்திருக்கவில்லை என்பது உறுதியாயிற்று.

குறும்பியன் என்பான் எவனுமே இல்லாதபோது, அவன் கோசனா? அல்லனா? என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் போய் விட்டது.

134