பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. இளங்கோசர் தலைவன் பழையன் மாறன் முடிவு யாது? இளம்பல் கோசர் தலைவனாய், பாண்டியன் தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் படைத் தலைவனாய்ப் பணி புரிந்து, வெள்ளம் போலும் பெரும் படையோடு கூடல் மாநகரைத் தாக்க வந்த கிள்ளிவள வனை வென்று அவனுக்குரிய களிற்றுப் படை முதலாம் படைகளையும், அவனுக்குத் துணை வந்தார் ஊர்களையும் கைப்பற்றிக் கொண்ட வெற்றி வீரன் என நக்கீரராலும்,? பரணராலும் பாராட்டப் பெற்ற பழையன் மாறன் என்ன ஆனான்? - தமிழகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேட் கை உந்த, தமிழகம் புகுந்த வடநாட்டு அரசர் முன்னணி தனக்குரிய மோகூர்க் கோட்டையைக் கைப்பற்ற வேண்டு மாயின்; வட பேரரசாம் மெளரியரின் தேர்ப்படையும் வந் தாக வேண்டும்; என்ற முடிவுக்கு வருமளவு, அவ் வட நாட்டு அரசர் முன்னணியை முறியடித்துத் தன் மோகூர்க் கோட்டையைக் காத்த காவல் வீரன் என மாமூலனாரால்! பாராட்டப் பெற்ற பழையன் மாறன் என்ன ஆனான். பரணரே விடையளித்துள்ளார். அந்த விடை இதோ: "சேரன் செங்குட்டுவனுடைய சிறந்த iநண்ம்ர்களுள், அறுகை என்பானும் ஒருவன் அறுகை பகைவர் நாடுகள் மீது படையெடுத்துச் சென்று, வென்று மீளும் வல்லமை யுடையவன் அத்தகையான், ஒருமுறை, பழையன் மாற னுக்குரிய மோகூரைத் தாக்கினான். ஆனால்,பெரும் படை 136