மோகூர் ப் பழையனைச், சேரன் செங்குட்டுவன் பழி வாங்கின மைக்கு அறுகையின் தோல்வி மட்டுந்தான் கார னமா? அன்று அப்போதைய அரசியல் சூழ் நிலையைக் கூர்ந்து நோக்கினால், வேறு காரணங்களும் புலப்படு கின்றன. ப ண் டி ய ன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாய்ப் பணிபுரிந்தவன் பழையன் மாறன் கூடல் மாநகரைக் கைப்பற்ற வந்த கிள்ளி வளவனை வென்று அவன் படைகளைக் கவர்ந்த தோடு, அவனுக்குத் துணை வந்த அரசர்களின் ஊர்களை யும் கைப்பற்றிக் கொண்டான் என்கிறார் நக்கீரர்.8 அது கூறிய அவரே, சேரன், சோழன், உள்ளிட்ட எழு வரை, நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தே வென்ற செய்தியையும் கூறியுள்ளார். தன்மீது போர் தொடுத்து வந்த பகைவரைச் செழியன், அவர்களின் ஊர் வரைத்துரத் திச் சென்று வென்றான் என்கிறார், தலையாலங்கானப் போர் நிகழ்ச்சிகளைப் பல பாடல்கலில் விளக்கும் புலவர் இடைக்குன்றுார் கிழார்.19 இவற்றையெல்லாம் வைத்து நோக்கிய வழி இவை யெல்லாம் தலையாலங்கானப் போரில் பாண்டியர் படைத் தளபதி பழையன் மாறன் ஆவன் என்பதற்கான வலு வான சான்றுகளாக அமைகின்றன. - அப்போரில் தோற்றோரில் சேரனும் ஒருவன். தோற் றோர் வரிசையில் முதல் இடம் வைப்பவனும் அவனே. ஆகவே, தன் குலத்தான் ஒருவனை வென்றவன் பழையன் மாறன் என்பதால் செங்குட்டுவனுக்கு அவன் மீது படை எழுவதற்கு அதுவும் ஒரு காரணமாதல் கூடும். 138
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை