பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை. அருணா பப்ளிகேஷன்ஸ், 1960 நவம்பர் திங்களில் வெளியிட்ட, தமிழகத்தில் கோசர்கள் ' என்ற நூலில், பக்கம், 85 ல், பழையன் மாறன், பாண்டிநாட்டி லிருந்து வரும் பெரும்படையை எதிர்நோக்கி அரணகத்தே அடங்கியிருந்தான் என்றும், பக்கம் 86-ல் 'மோகூர் முற்றுகைச் செய்தியை அறிந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் என்றும், பக்கம் 87-ல், கோசர் படையையே அனுப்புதல் வேண்டும் என அறிந்தான் என்றும், கோசர்கள், உடனே ஒன்று திரண்டு வந்து, தலைநகரில் அணிவகுத்து நிற்கும் தேர்களையும், களிறுகளையும், குதிரைகளையும் ப னி கொண்டு, பழையன் மோகூர் நோக்கிப் புறப்பட்டு விட்டனர் என்றும், பக்கம் 88-ல், ° வ ட வர் ப ைட, விளைவறியாது. வெருண்டோடத் தொடங்கின. அ வ் வாறு வெருண்டோடிய அவரை, விரைந்து வரும் கோசர் படை மடக்கி நிறுத்தி நெடும் போர் புரிந்து நிலையழித்து விட்டது ' என்றும், பழை யனும், அவன் கீழ்ப் பணி புரிந்த கோசர்களும், தமிழகத் திற்கு வடநாட்டுப் பேரரசு மரபினராம் மோரிய மன்னர் களால் வர இருந்த பேரழிவையும் போக்கி, அழியாப் பெரும்புகழ் கொண்டு பீடும் பெருமையும் பெருகப் பெருவாழ்வு வாழ்ந்திருந்தனர் ' என்றும் எழுதியுள்ளேன். 5. கோவை கிழார் அவர்களின் கருத்து : கோவை கிழார் ' என அன்போடு அழைக்கப்பெறும் திருவாளர் கோ. மா. இராமச்சந்திரசெட்டியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1954-ல் வெளியிட்ட ' கொங்கு நாட்டு வரலாறு' என்ற தம் நூலின் 65-ஆம் பக்கத்தில், கேர்சர்களுக்கு மோகூர் பணியாமையினால் மோரியர் புடையெடுத்து வந்தனர் . என்றும், 66-ஆம் பக்கத்தில் மோகூர் மீது கோசர்கள் படையெடுத்தார்கள் அவர்கள் .ெ வ ல் ல முடியாது போகவே, மோரியர்கள், 6 -