17. கோசர் யார் : யாது அவர் முடிவு அகுதையைக் காத்து அறப்பணி ஆற்றியவர் கோசர்; நன்னன் நறுமா கொன்று, பெண் கொலை புரிந்த நன்ன னைப் பழி தீர்த்துக் கொண்டவர் கோசர் அன்னி மிஞிலி யின் தந்தையின் கண்களைப் போக்கி, அழுந்துர்த் திதிய னால் அழிவுண்டவர் ஊர் முது கோசர் மோகூர்ப் பழைய னுக்கு நண்பரா. பகைவரா என்ற வினாக்குறி எழுப்பி நிற்பவர் கோசர், யார் இந்தக் கோசர்? யாது அவர் முடிவு. பொலம் பூண் கிள்ளியைக் கோசர் படை அழித்ததா? அல்லது பொலம் பூண் கிள்ளிபடையால் கோசர் படை அழி வுற்றதா? வாட்டாற்று எழினி ஆதனைக் கோசர் கொன் றனரா? திதியன் கோசர் குலத்தவனா? தழும்பன் கோசர் மரபினனா? ஆதன் எழினி கோசர் இனத்தவனா? குறும் பியன் என்ற பெயரில் படைமறவன் எவனேனும் இருந்தன னா? இருந்திருந்தால் அவன் கோசர் வழி வந்தவனா? பழையன் மாறன் முடிவுயாது? அவன் மோகூர், அதாவது மோரியர் தாக்கிய மோகூர் யாண்டுளது? கண்ணகிக்கு, கொங்கில் கோயில் கட்டியது, அடியார்க்கு நல்லார்க்கு உடன்பாடில்லை என்பது உண்மையா? என்பன போலும் கேள்விக்கனைகளுக்கு ஒத்த விடைகாண மாட்டாது, வர லாற்றுப் பேராசிரியர்களை, ஒருவரோடு ஒருவரை, கருத்து வேற்றுமையில் மோதவிடக் காரணமாக நிற்கும் இக்கோ சர் யார்? யாது அவர் முடிவு. அடியேன் (புலவர் கா கோவிந்தன்) கருத்து : திருநெல்வேலித், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற். பதிப்புக் கழகம், 1955ல் வெளியிட்ட, சங்ககால அரசர் 148
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/160
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை