பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) கோசர் பிற்காலத்துப் பாண்டியர்கட்கும் கைக் கோட் சேனாபதிகள் என்னும் பெயருடையராயிருந்தது, இப்படிச் சம்மதித்து விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத் தோம் ஆதி சண்டேச்சுர தேவர்க்கு திருநெல்வேலி கைக் கோட் சேனாபதிகளோம். இவை அதிசய பாண்டிய வத் தராயன் எழுத்து இவை விக்கிரம பாண்டிய வத் தராயன் எழுத்து' என வருதலானறியப்படுவது. 2) இவர் சோழர் கைக் கோட் படையாளராகவும் இருந்தனர் என்பதும் சாசனங்களால் அறியப்படுவது. *திரிபுவன வீர தேவன் மெய்கீர்த்தியில், சாமரையும் கோசரானையும் மேம் பரியும் கொடித் தேருங் குஞ்சரமும் வைகை ந டு ம் சோழர் கொண்டாரெனத் தெரிதலால் அறியலாம். 3) பூரீராஜராஜதேவர் கைக் கோட் படை, பராந் தகன் தெரிந்த கைக் கோளரும், சுந்தர சோழர் தெரிந்த கைக் கோளரும் என்பதால் அறியலாம். 4) நம்பிராட்டியார் நேரியன் மாதேவி யகப் பரிவாரத் துக் கைக்கோளன் சோறுடையான் அருக்கனான அன்பார பாணாதிராயன் என வருதலான் அறியப்படுவது 5) பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக் கோளரும், அபிமான் பூஷண தெரிஞ்ச கைக்கோளரும்8 என்பவற்றால் அறியப்படும். . மேலே காட்டியுள்ள அகச் சான்றுகளில், முதலாவதில் கையெழுத்து இட்டவர்கள் பெயர்களில் தான், கோசர் மூலம் குறிக்கும் வத்தவராயர் என்ற பெயர் வந்துளது. அதனாலேயே, அதில் கண்டுள்ள சேனாபதிகள் கோ சர் ஆகிவிடார். அதனாலேயே அவர்கள், கோசரின் வேறு 151