பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட கோளர் என்பதை வற்புறுத்த அவர்கள் திருநெல் வேலி கைக் கோட் சேனாபதிகள்' என வேறு பிரித்துக் காட்டப்பட்டுள்ளனர். - எடுத்துக்காட்டு இரண்டில், இவர் சோழர் கைக்கோட் படையாளராகவும் இருந்தனர்' எனக் கூறினாலும், காட் டியுள்ள சாசனப் பகுதியில், கைக்கோளரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. கோசராணை, குறிப்பிடப் பட்டுளது என்றாலும், அவர்களைக் கைக்கோளரோடு தொடர்பு படுத்தும் குறிப்பு எதுவும் இல்லை, ஏனைய எடுத்துக் காட்டுக்கள் 3,4, 5, 6, ஆகியவற்றில் கைக் கோளர் குறிப்பிடப் பட்டிருந்தாலும், கோசர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அடிப்படை சான்று எதுவும் இல்லாத நிலையில் கைக் கோளர்களைக் கோசர்களாகக் கொண்டு, கோசர் என்ற சொல், கோயர்' என்று ஆகி. அது மீண்டும் கோளர்' என ஆகிவிட்டது என வாதிடுவதில் வலுவில்லை. - மேலும், கூறிய எடுத்துக்காட்டுகளில் கோளர் இடம் பெற்றிருக்கும் ஐந்திலும், அவர்கள் ஒழுக்கத்தை உடைய வர் என்பதை உணர்த்தவரும் 'கை' என்ற சொல் அடை யாக வரக் கைக் கோளர் என்று தான் கூறப்பட் டுள்ளதே அல்லது, கோளர் என அடிையின்றிக் கூறப் படவில்லை என்பது, அவர்களைக் குறிக்கும் கோளர்' என்ற சொல், கோசர் என்பதன் திரிபு அன்று என்பதை உணர்த்தும், திருவாளர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. அவர்களின் கருத்து : - - - - - - கோசர், குசர் வழி வந்தவர் என்ற கொள்கையைச் 'சேரமன்னர் வரலாறு' என்ற தம் நூலில் சிந்தாந்த கலா, 152.