பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் மறுத்துள் ளார். திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள் கூறிய தை மறுத்ததுடன் அமையாது திரு. ஒளவை. அவர்கள் 'கோசர் பற்றி வேறு விளக்கங்களையும் தம் நூலில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பது வருமாறு: - தைகிரிஸ் (Tigiris) நதிக்குக் கிழக்கில் சகராசு (Zagros) மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கட்குக் கோசர்" (Kossears) என்பது பெயர். வில் வேட்டம் புரிவதே அவர் தொழில். பின்னர் அவர்கள், மலையடி வாரத்தில் வாழ்ந்த இரானியர்களான கிருதர் (Kபrds) அனுசர் (Anshai) முதலியோருடன் கலப்புற்றனர் அவர்கள் அனைவரையும் கிரேக்கர்கள் கிசியர் (Kissiers) என்றும் அவர்கள் நாட்டை கிசியா என்றும், அவர்களது தலைநகரை சூசா (Susa) என்றும் வழங்கினர். சூசா என்பது அவர்கள் மொழியில் நான்கு ஊர்கள் என்றும், நான்கு மொழிகள் என்றும் பொருள்படும், - இக் கோசர்கள் மேலைக் கடற்கரையில் வந்து தங்கிய யவனருடன் போந்து, துளு நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தங்கி வாழ்ந்தனர். துளுநாட்டின் கால நிலையும், மலை வளமும், தங்களுடைய தாயகமாகிய பாபிலோனிய நாட் டைப் போலவே இருந்தமையால் தங்கள் சொந்த நாட் டிற்குத் திரும்பிப் போக மன மின்றித் துளுநாட்டிலேயே தங்கினர். அவர்கள் தங்கள் நாட்டில் நாடோடி வாழ்க்கை நடத்தியதால், தங்கட்கு எனத் தனி நாட்டை அமைத்துக் கொள்ளாமல் கொங்கு நாட்டில் இருந்த வேளிர்களுக்கு விற்படை மறவராக வாழ்ந்து வருவாராயினர். கொண் கான நாட்டு வேளிர் தலைவர்களும், பாயல் மல்ை நாட் டுத் தலைவர்களும், இக் கோசர்களையும், தமக்குப்படை வீரர்களாகக் கொண்டனர். நன்னன் மரபினர், கொங்கு நிாட்டில் பரவிய பொழுது, அவர்களோடு இக்கோசர்களும் சென்று தங்கினர், 2. ' # 153