டாக்டர். சி. ஈ, இராமச்சந்திரன் அவர்கள் கருத்து : சென்னைப் பல்கலைக் கழகம் 1974ல் வெளியிட்ட 'வரலாற்று நிலையில் அகநானூறு (Ahananuru in its Historical Setting) என்ற தம் நூலில் சென்னைப் பல் கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக விளங்கியவ ரான டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள், கோசர் யாவர் என அடையாளம் காண்பது, மிகப் பெருமளவிலான விவாதத்திற்கு உரியது ஒன்று. திருவா ளர்கள். வி. ஏ. ஸ்மித்' வி. ஆர். இராமச்சந்திர தீகூடிதர்க் போல்வார், அசோகனின் பாறைக் கல்வெட்டில் குறிப்பி டப் பட்டிருக்கும் சத்யபுதரர் அல்லது சத்திய புத்ரர்க ளோடு கோசர்களை இனங்காட்டும் போது, திருவாளர். கே. ஏ. நீலகண்ட் சாஸ்திரியார் அவர்கள், அவ்விருவர் க்ளும் (சத்யபுதரர், சத்தியபுத்ரர்) ஒருவரோடு ஒருவர் மாறு பட்டவர் என நினைவூட்ட விரும்புகிறார்; சத்யாபுத்ரர் என்ற சொல், அதியமான்கள் எனற சொல்வி லிருந்து பெறக்கூடியதாம் என்ற, திருவாளர் பர்ரோ அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் திருவாளர். டாக்டர் என். சுப்பிரமணியம் அவர்கள் கோசர் யார் என்பதைப் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்து விட்டு, இப்போது கிடைக்கும் அகச் சான்றுகளின் அடிப்படையில், கோசர் ளைச் சத்திய புத்திரர்களாகக் கொள்வதே பொருந்தும் முடிவாகத் தெரிகிறது என முடித்துள்ளார்’ என்று எழுதி முடித்தார்" . . . . . . . . . . . ; , . . . - . . அதில், திருவாளர் வி. ஏ. ஸ்மித் முதல் திருவாளர் டாக்டர். என். சுப்பிரமணியம் வரையான வரல்ாற்றுப் பேராசிரியர்கள். கூறியிருப்பன. இன்னின்ன என்பதைத் தான் குறிப்பிட்டுச் சென்றுள்ளாரே யல்லது, கோசர் பற்றிய தமகருத்து இதுதான் என்பதைத் திட்டவட்டமாகக் கூறவில்லை. - 156
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை