ஒற்றுமையாம் வலுவிலாச் சான்றினை அடிப்படையாகக் கொண்டுளது ஆகவே, இக் கருத்தும் ஏற்புடையதன்று. சத்தியபுத்திர நாட்டைப் பூனாவுக்கு அணித்தாகக் கொள்ளும் திருவாளர் பந்தர் கார் அவர்கள் கருத்தும் ஏற் புடையதன்று திருவாளர் வி. ஏ. ஸ்மித் அவர்கள் மகாராட் டிரம் மெளரியப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தது; சத்யபுத்ரர், அசோகனுக்கு அடங்கா அரசாகவே இருந்தது என்ற காரணம் காட்டி, அக் கருத்தை அறவே மறுத்துள் 6Tr府‘29 தொடர்ந்து,கோசர் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து எழுதியுள்ள திருவாளர் என். சுப்பிரமணியம் அவர்கள்0ே திருவாளர். வி. ஆர். இராமச்சந்திர தீகூஜிதர் கருத்து இது திருவாளர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் கருத்து இது; திருவாளர் பி. ஏ. சலேடர் (Saletore) கருத்து இது; எனப் பிறர் கருத்துக்களை எடுத்துக் கூறியும் அவற்றுள் இன்னார் கருத்து, இன்ன காரணத்தால் ஏற்புடையது. இன்னார் கருத்து, இன்ன காரணத்தால் ஏற்புடைய தாகாது எனக் கூறியும் தான் சென்றுள்ளாரே அல்லது தம்முடைய கருத்து இதுதான் எனத் தெளிவாகக் கூறவில்லை. முடிவுரை : ஆக, இதுவரை எடுத்து வைத்த விரிவான விளக்கங் களிலிருந்தும், கோசர் யார் என்ற திட்ட வட்டமான முடி விற்கு வர வரலாற்று ஆசிரியர்களால் இயலவில்லை என் பதே தெளிகிறது; குசர் வழி வந்தவர்; குஷானர் வழி வந்தவர் பாபிலோனிய யவனர், இராமாயணக் கோசக்காரர், 162
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை