பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாக கோ சர் வந்ததுபற்றிய புலவர் மாமூலனாரின் குறிப்பு ஈண்டு வலியுறுத்தப் பெறுகிறது" என்றும், 46-ஆம் பக்கத்தில், மோகூர்ப் பேரவை, கோசர் இருப்பால் பெருமை பெற்றது என மதுரைக் காஞ்சி நமக்கு அறிவிக்கிறது என்றும் கூறியுள்ளார். 8. திரு. சி. ஈ. இராமச்சந்திரன் அவர்களின் கருத்து : சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் சி . இராமச்சந்திரன் அவர்கள், 1974-ல் எழுதி, சென்னைப் பல்கலைக் கழகத் தால் வெளியிடப்பட்ட, ‘வரலாற்று நிலையில் அகநானூறு (Ahananuru in its Historical setting) orsi D gith Braşsir 13 ஆம் பக்கத்தில், அகநானூற்றின் மற்றொரு பாடல் (257 மோகூரை வெற்றி கொள்ள கோசர் தவறியபோது, அவர்களுக்குத் துணையாக வம்ப மோரியர் சேர்ந்து கொண்டனர்" என்றும், பக்கம் 52ல் அகநானூற்றின் மற்றொரு பாடல் (281), மோரியர், தென்னாட்டின்மீது படையெடுத்த போது, அவர்களுக்குத் தூசிப்படையாக வடுகர் சென்றனர் எனக் கூறுகிறது. அவ்வாறு தூசிப் படையாகச் சென்ற வடுகர் என்பார் கோசர் ஆதல் வேண்டும், ஆகவே, இவ்வாறு துளசிப்படையாக வந்த கோசர், மோகூரை மோரியர் தாக்கியபோது, அம் மோரியர் ஆணைப்படிதான் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். . . . திருவிாளர் சி.ஈ. இராமச்சந்திரன் அவர்கள். தமிழ் நாட்டுப்பர்டநூல் நிறுவனம், 1983ல் வெளியிட்டுள்ள, :தமிழ்நாட்டு வரலாறு' (சங்க காலம்-அரசியல்}-என்ற நூலில், அடிப்படைச் சான்றுகள் என்ற தலைப்பில் எழுதி யுள்ள தம் து ரயின் 19ஆம் பக்கத்தில்: 'மெளரியர், கோசருடன் சேர்ந்து கொண்டு மோகூர்க் சிற்றரசனான