பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ற இவ்வரிகளைக் கருத்தில் கொண்டிருந்தால்மோகூர் மன்னன் பழையன் மாறன், கோசர்களின் தலைவனே அல்லது, பகைவன் அல்லன் என்பதையும், கோசர், தங்கள் தலைவன் தலைநகராம் மோகூரைக் காக்கத் துணை போயிருப்பரே அல்லது, அம் மோகூரை அழிக்க, அம் மோகூர் மன்னனை வெற்றி கொள்ள முனைந்தார்க்குத் துணை போயிருக்க மாட்டார்; துணை போகவில்லை என்பதையும் உணர்ந்திருப்பர்.

வரலாற்றுத் திறனாய்வார், தாம் எடுத்துக் கொண்ட பொருள் குறித்த அனைத்து அகச்சான்றுகளையும் அரிதின் முயன்று தேடிக் காணுதல் வேண்டும். பரந்து கிடக்கும் சங்க இலக்கியத்தில், ஒரு சில வரிகளைக் கருத்தில், கொள்ளாவிடின், வரலாற்று நிகழ்ச்சிகள் எந்த அளவு தலைகீழாகிப் போய் விடும் என்பதற்கு இஃதொரு நல்ல எடுத்துக்காட்டு.

15