பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றொரு ஆய்வாளரான, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியராக விளங்கிய டாக்டர். க. த. திருநாவுக்கரசு அவர்கள்; குறுநில மன்னர்கள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள தம் கட்டுரையில் ச்ேலம் மாவட்டத்தில், நாமக்கல்லில் இருந்து 14 கி. மீ. தொலை வில், காவிரியின் தெற்குக் கரையில் மோகனூர் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊரைச் சங்க காலத்தில் சிறப் புற்று விளங்கிய மோகூராக அறிஞர் கருதுகின்றனர்' என்று குறித்துள்ளார். மோகூர் கொங்கு நாட்டில் உள்ள ஒரு இடம் என்ற கருத்தை மேற்சொன்ன ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கும் அதே தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம்-அரசியல்’ என்ற நூலில் சேரர்; சோழர் ,பாண்டியர் இலங்கை யில் தமிழர் என நான்கு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ள ஆராய்ச்சிப் பேரறிஞர் திருவாளர் மயிலைசீனி வேங்கடசாமி அவர்கள் ஓரிடத்திற்கு மூன்று இடங்களில் பாண்டிநாட்டில், மதுரைக்கு அருகில் உள்ள மோகூர் தான், பழையன் மாறனுக்கு உரிய மோகூர் எனக்கூறி யுள்ளார்.4 . - - ; : ... . " - சேரர்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் இது (மோகூர்) பாண்டிய நாட்டில் இருந்த ஒரு ஊராகும்’ என்றும், பாண்டியன்' என்ற தலைப்பிட்ட் தம் கட்டுரை யில் 'மதுரைக்கு அருகில் மோகூர் இருந்தது. பிற்காலத் தில் இது 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் எனப்பெயர் பெற்றது எனவும், 'இலங்கை யில் தமிழர் என்ற மற்றொரு கட்டுரையில் 'பழையன் மாறன் என்னும் குடிப்பெயருள்ளவர் பாண்டியர்களுக்குச் சேனைத் தலைவராக இருந்தார்கள். அவர்கள் மதுரைக்கு ல் வாழ்ந்து வந்தனர்' என்றும் அருகில் உள்ள மோகூரி குறிப்பிட்டுள்ளார்.