இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. மோரியரின் படையெடுப்பிற்குச் சான்று கூறும் சங்கப் பாடல்கள் ஐந்தும் தென்னாட்டுப் படை யெடுப்பைக் குறிப்பிடுவன தாமா? மோரியரின் படையெடுப்பிற்குச் சான்று கூறும் சங்கப் பாடல்கள் ஐந்து; அவை வருமாறு : 'பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொண்டி தொன் மூதாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர்’ - குறுந்தொகை;பாடல் 15
- வெல் கொடித்
துனை காலன்ன புனைதேர்க் கோசர் தொன் மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழுதானை வம்ப மோரியர் , - புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய அறை"
- , - அகநானூறு : பாடல் 2512
'முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பணி இருங் குன்றத்து ஒண் கதிர்த் திகரி உருளிய குறைத்த அறை" - - - அகநானூறு : பாடல் 2818, 28