பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கம் 51ல், அகநானூற்றின் பிறி தோரிடத்தில், அதாவது அகம் 205ல், கிள்ளி, தன் நாட்டு எல்லையைப் பரப்பும் ஆகையால், கோசர் படையை அழித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கிள்ளியும், மேலே கூறிய கிள்ளி வளவனும் (பக்கம் 20) ஒருவனாகக் கருதப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.19 - 4, திரு. ഥിങ്ങ് சீனி வேங்கடசாமி அவர்களின் கருத்து - தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினரால் தொகுக்கப் பெற்று, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்காக 1983ல் வெளியிட்டிருக்கும், 'தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' என்ற நூலில், சோழர்' பற்றிய வரலாறு எழுதியிருக்கும், ஆராய்ச்சிப் பேரறிஞர் திருவாளர். மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள், அந் 333ம் பக்கத்தில், "பொலம்பூண் கிள்ளி வரலாறு உரைக் கும் பகுதியில், 'பொலம்பூண் கிள்ளி என்று குறிப்பிடப்படும் இவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்துகொண்டு காவிரிஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள நாட்டை ஆண்டு வந்தான். இவன் கோசர்களின் படையை அழித்தான். அன்றி யும், "அவர்களது நாட்டையும் கைப்பற்ற முயன்றான்” எனக் கூறி, மேலே காட்டிய அகச்சான்றுகள் நான்கினுள் 18 அகம் 205ஐ மட்டும் காட்டியுள்ளார். பாட்டு : - வரலாற்று ஆய்வாளர்களை யெல்லாம் இ வ் வா று பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கும், அச்சிலவரிகள் கூறும் 44