புகழ் என்றாகும். தோன்றின் புகழொடு தோன்றுக'2 அத் தகு நல்புகழை இயல்பாகவே பெற்ற பெரியவர்கள் கோசர் என்பதாயிற்று. விளங்கு படை : விளங்கு என்பதற்கு முன்னரே விளக்கம் அளிக்கப் பட்டது, அப்பெருமைக் கெல்லாம் உரிய படை கோசர் !J.5Ø L., நூறி : இது, பொலம்பூண் கிள்ளி விரும்பிய செயலைக் குறிப் பிடுவது. அருசமம் தகைய நூறி” என்ற வரிக்கு உரை யாசிரியர் அளிக்கும் உரை,‘சிதற வெட்டி என்பது. அறவே உருவே தெரியாமல் அழித்து என்பது. இது பொலம்பூண் கிள்ளியின் உள்ளத்து வெறித் தன்மையையே உணர்த்து வதாய் அவனுக்கு இழிவு சேர்த்துளது. கொள : கொள்வது தீது, நல்லாறு எனினும் முகாளது தீது: என்பன ஆன்றோர் உரைகள் : கொள்வதாவது, தனக்கு உரிமையில்லாததைப் பெறுவதே கொள்வதாம். ஆக, இதுவும் கிள்ளியின் ஆகா ஆசையை உணர்த்தி அவன் புகழ் குறைப்பதாம். - வெகிய : வெகு தலாவது : பிறர்க்குரிய பொருளை வெளவுதல் ஒருவர்பால் இருக்கக் கூடாதனவற்றுள் வெகுதலையும் 49
பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/page59-741px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg)