பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது கூறும் நக்கீரர் பாடிய நெடுநல்வாடையின் பாட் டுடைத் தலைவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் தம் பாட்டுடைத் தலைவனின் படைத் தலைவன் பழையன் மாறன், அப் பாண்டியர் குலப் பகை வராம் சோழர் வழி வந்த பொலம்பூண் கிள்ளிபால் தோல்வி கண்டிருந்தால், அதைத் தம் இரு பாடல்களில் கூறிப் பாராட்டியிருப்பாரா, என்ற கேள்விக்கு விடை யிறுக்க வேண்டியது வரலாற்று ஆசிரியர்களின் இன்றி யமையா முதற் பெரும் கடமை ஆகும். புறநானூறு கூறும் செய்தி : நிற்க. தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியனையும், அவனுடைய தலையாலங்கானப் போரை யும் சிறப்பித்துப் பல பாடல்கள் பாடிய புலவர் இடைக்குன் னுார் கிழார் அவர் தம்முடைய ஒரு பாட்டில், எல்லா வகையிலும் பெருமை உடையவர் நாம், நம் மிடம் உள்ள படையும் பெரிது, ஆனால் நாம் போரிடப் போகும் பகைவனோ, நனி மிக இளையன், அவனை வெற்றி கொண்டால் நாம் பெறப் போகும் பொருட்குவி யலோ எண்ணில் அடங்காது. எனக்கூறித், தன்னை இகழ் ந்து வந்த, நிலையிலாப் பகையரசர்கள், போர் தொடங்கிய பகையரசர்கள், போர் தொடங்கிய அக்கணமே, தோற்றுப் போர்க்களத்தில் நிற்கவும் மாட்டாது. புறங்காட்டி ஒடத் தொடங்க, அவர்களை அப்போா க் களத்திலேயே அழிப் பது தனக்குப் பெருமையாகாது என்பதால், அவர்களின் நாடு வரையும் துரத்திச் சென்று ஆங்கு அவர்களின் மனை வியர், தம் கணவர்தம் தோல்வி கண்டு நாணி உயிர் துறந்து போக, அப் பகையரசர்களின் தந்தையர் உரிமை யாக்கி வைத்த, அவர்களின் ஊர்களிடத்தே கொன்று அழித்தான்' எனக் கூறியுள்ளார். 55