பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னால் செய்யப்பட்ட பாவை ஒன்றையும் கொடுக்கின்றேன்: அவளுக்குக் கொடுத்திருக்கும் கொலைத் தண்டத்தை அருள் கூர்ந்து கைவிடுக' என வேண்டினான். ஆனால், நன்னன் அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டானல்லன் தான் விதித்த கொலைத் தண்டத்தையே நிறைவேற்றி விட்டான், - பெண் கொலை புரிந்த நன்னனின் கொடுஞ்செயல் நாடெங்கும் பரவிற்று. கோசரும் அது கேட்டனர். அகுதை பால் நன்னன் நடந்து கொண்ட முறை கண்டே கொதித் திருந்த அவர்கள், இக் கொடுஞ் செயலால் கடுஞ்சினம் கொண்டனர். பெண் கொலை புரிந்த நன்னனைப் பழி தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர். அவனைக் கொலை செய்து விடலாம். அது அவர்களுக்கு எளிய செயல் ஆனால் அது அவனுக்கு உரிய தண்டனை ஆகாது. மாறாக எந்த மாமரத்துக் காயைத் தின்றாள் என்பதற் காக, அப்பெண்ணைக் கொன்றானோ, அந்த மரம் வேரற்று வி ழ வேண்டும் வீழ்ந்த மரத்தைச் சிறு சிறு துண்டங்களாக்கி, நாட்டாரெல்லாம் கொண்டு சென்று. விடவேண்டும்; மாமரம் நின்ற இடம் வெற்றிடமாக இருப் பதைக் கண் டு, கண்டு, அவன், காலமெல்லாம் கண்ணிர் சொரிந்து கலங்கிக் கிடக்க வேண்டும்; அதுவே, அவனுக்கு அளிக்கத்தரும் தண்டனையாகும் என்ற மு. டி. வி. ற் கு வந்தனர். அம் முடி விற்கு வந்த கோசர், தம் பணியில் அகுதை யின் பங்கும் இருக்க வேண்டும்; அப்போது தான், நன்ன னைத் துயரின் எல்லைக்கே துரத்த முடியும் என்று எண்ணினர். அகுதை, தன் அவை புகுந்து, தன் புகழ்பாடும் அகவல் மகளிர்க்கு, அவர் விரும்பும் பொன்னணிகளோடு, பிடி 67.