பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் அனைத்தையும் கொண்டுபோய், நன்னன் காவல் மரமாம், அம் மரத்தில் பிணித்து விட்டு வந்து விடுமாறு, அகவல் மகளிரை வேண்டிக் கொண்டனர். அவர்களும் அது செய்து முடித்தனர். ஒரு யானையின் ஈர்ப்பிற்கே தாங்காது அம்மரம். அகவன் மகளிர் பிணித்த எண்ணி லாப் பிடிகள் அனைத்தும், ஒரு சேர ஈர்க்கவே, வேரற்று. வீழ்ந்து விட்டது வீழ்ந்து பட்ட மரத்தை நாட்ட வர் சூழ்ந்து கொண்டு, சிறு, சிறு துண்டுகளாக்கிக்கொண்டு சென்று விட்டனர். - - பெண் கொலை புரிந்த தன் கொடுமைக்குக் காரண மாக நின்ற தன் மாமரம், தன் கண் முன்பாகவே இவ்வாறு இல்லாமல் போனது கண்டு காலமெல்லாம் கலங்கலாயி னான் நன்னன், அவ்வகையால், வாள் எடுக்காமலே, பெண் கொலைபுரிந்த நன்னனுக்குக் கொல்லாமல், கொல் லும் கொலை தண்டனையைத் தந்து விட்டனர் கோசர். தமிழக வரலாற்றில் கோசர் ஆற்றிய அரும்பணிகளில் இதுவும் ஒன்று. இவ்வரும் பணி அறியத் துணைபுரிவன கீழே கொடுத் திருக்கும், பரணர் பாக்கள் மூன்றும். r 1 மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல் தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை பொன் செப்பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் '9 - 2. "அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர் 69