பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுமை செய்தவர்களைக் கொன்றான். ஊர் முதுகோசரின் அழிவு கண்டு, தன் சினம் மாறி அக மகிழ்ந்தாள் அன்னி மிஞிலி.

இவ்வரலாற்று நிகழ்ச்சியினை அறிய நமக்குத் துணை புரிவன பரணர் பாடிய இப்பாடல்கள் இரண்டும் :

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆடுவினைக் கலித்துப்
பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள்; வாலிதும் உடா அள்;.
சினத்திற் கொண்ட படிவம் மாறாள்;
பறங் கெழுதானைக் கொற்றக் குறும்பியன்
செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து, அவர்
இன்னுயிர் செருப்பக் கண்டு சினம்மாறிய
அன்னி மிஞிலி”

—அகம்-262


2. “தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்று மொழிக் கோசர்க் கொன்று முரண்போக்கிய
கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்!”

–அகம்-196

73