பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படத்தக்க எளியர் அல்லர் என்பது. இது கூறும் இவரே அதே நூலில் பிறிதோரிடத்தில், சோணாட்டில் இவர் (கோசர்) வலிபெற்று வீறுதலைக் கண்டு பொறாது கிள்ளி வளவன் இவர் படையைச் சிதற அடித்தனன்' என்றும் கூறியுள்ளார். ஆக இரண்டாவது காரணமும் பொருந் தாது. மூன்றாவது காரணம், கோசர் முரண் போக்கிய திதி யனுக்கு உரிய அழு ந் ைத வேறு, வேளிர்க்கு உரிய அழுந்தை வேறு, என்பது இது கூறிய அவர், தம் கூற்றிற் கான அகச் சான்று எதையும் காட்டினாரல்லர்,; ஆகவே அது எடுபடாது. ஆக, அழுந்தைத் திதியன் கோசர் இனத்தவன் என்ப தற்கு திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள்காட்டும் காரணம் எதுவும் ஏற்புடையன அல்ல; திதியன் கோசர் . குடியினன் அல்லன். - 2. பொதியில் திதியன் : தன்னோடு போரிட வருவார் தம் பேராண்மையைத் தன் வில்லாண்மையாலும் பகைவர்களின் யானைப் படை யைத் தன் வேற்படையாலும் அழிக்க வல்லவனும் பொன் னாலான தேர் பல உடையவனும், பொதியிலை ஆண்டி ருந்தோனுமாகிய திதியன் ஒருவனையும் சங்கப் பாடல்கள் அறிமுகம் செய்துள்ளன, அப்பாடல்கள் வருமாறு : -

  • பொருநர்,

செல்சமம் கடந்த வில் கெழு தடக்கைப் பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்" -ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன். 77