பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ளி வளவன்' எனவும், 'பொலம்பூண் கிள்ளி' எனவும் அ ழைக்கப்படும் ஒரு சோழ அரசன், கோசர் படையை அழித்துக் கூடலைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்தோடு அக் கூடலை வளைத்துப் பெரும் போர் புரியத் தொடங் கினான். அது கண்டு கடுஞ்சினம் கொண்ட பழையன்,தன் களிற்றுப் படையோடும் புறம் போந்து கிள்ளி வளவனை வளைத்துப் போரிட்டான் பழையன் பேராண்மையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இழந்து தோற்று ஓடினான் கிள்ளி. அக்கிள்ளி வளவனுக்கு உரிய களிறுகளையும், குதிரைகளையும் கணக்கில கைப் பற்றிக் கொண்டான் பழையன். அம்மட்டோடு அமையாது பாண்டி நாட்டை அடுத்திருந்த கிள்ளி வளவனுக்கு உரிய நல்ல ஊர்கள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் பழையன் என்ற இவ்வளவே பெறக்கூடிய செய்திகளாம். கூறிய அகச் சான்றுகள் மூன்றிலிருந்து பெறலாவது இதுவே ஆகவும், தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு தொகுத்து தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்காக 1983ல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட, ‘தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம்-அரசியல் என்ற நூலில், பாண்டியர் வரலாறு எழுதியுள்ள ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கட சாமி அவர்கள், பழையன் மாறன்’ என்ற தலைப்பின் கீழ், "கிள்ளி வளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர் நிகழ்க்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோ வலனது கொலையால் இவன் தன் அரியனையிலிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப்பெற முனைந்தான். அ. ந் த முயற்சியில் சோழன் கிள்ளி வளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் 84