பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழச்சியின் கத்தி மூவாயிரவரா கன் சேர்த்து மூலையிலே யாவருங்கா ணாமல் இருத்தினோம்-சாவுவந்தால் யாரெடுத்துப் போவாரோ, பெண்டுபிள்ளை யாருமில்லை ஊரெடுத்துப் போவதிலும், உங்கட்குச்-சேருவதில் ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள் இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும் என்பிள்ளை வேறு; பிறர்பிள்ளை வேறா? இதைநீயே கூறுவாய்' என்று சுதரிசன்-கூறினான். திண்ணையிலே குந்துங்கள் என்றுரைத்தாள் சேல்விழியாள் வெண்ணெய் என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண் ணென்று தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே-இந்தமங்கை என்று நினைத்த சுதரிசன், திண்ணைக்கே ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான்-பின்அவளோ கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள் 'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ-தேடிப்பார்? என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து, சுப்பம்மா! ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில்-அன்றொருநாள் செஞ்சியில்ஒருத்தி சிவப்புக்கல் கம்ம லொன்றை அஞ்சு வராகன் அடகுக்குக்-கெஞ்சினாள் முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே. சிற்றினச்சி வப்போ குருவிரத்தம்-உற்றதுபோல், கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல் தீவட்டிபோல் ஒளியைச் செய்வதுதான்-தேவையுண்டா? என்று சுதரிசன் கேட்டான், 'எனக்கது ஏன்?' என்று சுப்பம்மா எதிர் அறைக்குச்-சென்றுவிட்டாள். திண்ணைக்குச் சென்றான். சுதரிசன்சிங்க் இன்னுமென்ன பண்ணுவேன் என்று பதறுகையில்-பெண்ணாள் தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன இருகையில் வைக்கோலை ஏந்தி-வரக்கண்டே

24

24