பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7 திம்மன் ஆவல் தென்பாங்கு-கண்ணிகள் காலை உண வருந்திச்-சுதரிசன் காய்ச்சிய பால் பருகி ஓலைத் தடுக்கினிலே-திண்ணைதனில் ஓய்ந்து படுத் திருந்தான் வேலை கிடைக்கும் என்றீர்-உடனே விண்ணப்பம் போடுவதா?- நாலைந்து நாட்களுக்குப்-பிறகு நான்அங்கு வந்திடவா?' என்று திம்மன் வினவச்-சுதரிசன் "யாவும் முடித்து விட்டேன் இன்று கிளம்பி வந்தால்-நல்லபயன் ஏற்படும் அட்டி இல்லை. ஒன்றும் பெரிதில்லைகாண் திம்ம,நீ ஊருக்கு வந்த வுடன் மன்னர் இடத்தினிலே-உன்னையும் மற்றுன் மனைவியையும் காட்டி முடித்த வுடன்-கட்டளையும் கையிற் கிடைத் துவிடும் வீட்டுக்கு நீ வரலாம்-சிலநாள் வீட்டினில் தங்கிய பின் போட்ட தலைப் பாகை-கழற்றிடப் போவ தில்லை நீதான் மாட்டிய சட்டை யினை-கழற்றியும் வைத்திடப் போவதில்லை.

26

26