பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காடு எண்சீர் விருத்தம் 'நாளைநடப் பதைமனிதன் அறியான்', என்று நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன் காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக் கதை இழுக்க மனைவியைக் கை யோடி முத்துத் தேளை யொத்த சுதரிசனின் பேச்சை நம்பி செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான். வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும் வெளிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை! குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான். முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம். முன்நிலவும் அடங்கிற்று! முத்துச் சோளக் கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள் காரிருளும் ஆழ்ந்தது போய் அமைதி தன்னில் உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே உணர்ந்தார்கள். பின்அதனை அருகில் கேட்டார். மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்; விரைவாகச் சிலர்வருவ தாய் உணர்ந்தார். சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்; தோள் நோக்கிக் கத்திகளின் ஒளிகண்டார்கள்;

28

28