பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழச்சியின் கத்தி எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை. எலிக்கண்போல் எரிந்தது வண் டியின் விளக்கும்; இதோ குதிரை என்றார்கள் வந்த வர்கள், எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு! பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன் இறங்கி, 'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்! 'எங்கிருந்து வருகின்றீர்' என்றார் வந்தோர்! 'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்; பெயர் எனக்குச் சீனன்' என்றான் வண்டிக் காரன். 'உறங்குபவர் யார்உள்ளே' என்று கேட்டார். உளறலொடு திம்மன்'நான் வளவனூர்தான்' என்றுரைத்தான். 'இன்னும்யார்' என்று கேட்டாள். 'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன்! கேட்ட கன்னலைப்போல் மொழியுடையாள் துடிதுடித்தாள்! 'காரியந்தான் என்ன'வென்றார்! நடுங்குந் திம்மன், தன்கதையைக் கூறினான்! கேட்டார்! அன்னோர் சாற்றுகின்றார்: 'திம்மனே மோசம் போனாய் பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப் பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்; தமிழ்மொழியை இகழ்கின்றான்; தமிழர் தம்மைத் தாழ்ந்தவர் என் றிகழ்கின்றான்; தமிழ்ப் பெண்டிர் தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத் தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும் சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச் சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ முதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

29

29