பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழச்சியின் கத்தி நல்லதொரு தொண்டு செய்வாய்; செஞ்சியாளும் நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல வீணரல்ல யாம்;தமிழை இகழ்ந்தோர் வாழ்வின் சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே! சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே! இல்லையெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்; என்ன' என்றார். திம்மன், 'விடை தருவீர்' என்றான். 'போகின்றாய் போ!பிறன்பால் வால்கு ழைக்கப் போ! அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ! போ கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம் போக்கப்,போ ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள், சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத் தமிழர்மறம்! தமிழர்நெறி!' என்றார்! நங்கை 'போகின்றேன் என்னிடத்தில் கத்திஒன்று போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்! ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி! அவற்றில் ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்! 'தந்தோம் எம் தங்கச்சி வெல்க! வெல்க! தமிழச்சி உன்கத்தி வெல்க' என்றார். வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை. மாட்டுவண்டி சென்றது செஞ் சியினை நோக்கிப்! பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப் பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்!

30

30