பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை - தமிழச்சியின் கத்தி ஒரு புரட்சிக் காப்பியம்; தமிழர் இன மான உணர்வு எழுச்சிக் காப்பியம்; தமிழர்களை தமிழர் மாண்பை தமிழ்ப் பண்பை - தமிழர் நலத்தைத் தீய்த்திட்ட தீயவன் தேசிங்கின் ஆட்சியில் நடைபெற்ற கொடுங்கோன் மையை எடுத்துரைக்கும் வரலாற்று ஏடு! கண்ணகிக் காப்பியம் போன்றதோர் கவின் மிகு கற்புக் காப்பியம் - மறத்தி ஒருத்தி மன்னனை எதிர்த்துக் கருத்தூட்டி இழிந்தோர் ஆட்சியை எரித்திட வழிகாட்டும் அரசியற் காப்பியம். My தீ என்னை வாட்டினும் 8/ கையைத் தொடாதே யடா-இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி மூச்சு பெரிதில்லை காண்!' எனத் தமிழ வீரம் முழங்கும் வீரக் காப்பியம். 'என்னருங் கற்பினுக்கே-உன்னரும் இன்னலின் ஆட்சியையும் உன்னரும் ஆவியையும்-தரினும் ஒப்பில்லை என நேருக்குநேர் ஒரு தமிழச்சி தேசிங்கை இடித்துரைக்கும் காப்பியம்! வெட்டுவிப்பாய், ஒருகையை, மறுநாட்காலை வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றாநாளில் முதுகினிலே கழியுங்கள் சதையைப்; பின்னர் மூக்கறுக்க! காது பின்பு; ஒரு கை பின்பு; கொதிநீரைத் தெளித்திடுக இடைநேரத்தில்;

3

3