பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைச் சுருக்கம் டில்லியில் பாதுஷா செங்கோல் செலுத்துகிறான். ஆர்க்காட்டுப் பகுதி அவன் ஆணைக்கு உட்பட்டிருந்தது. ஆர்க்காட்டின் அதிகாரி நவாப். ஆர்க்காடு 172 பாளையப்பட்டாகப் பிரிக்கப்பட் டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டு, தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலர்க்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கம், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் கண்டார்கள். இளநீர் வெட்டிக் கொடுத்த திம்மன் அதோடு நிற்காமல் அவர்களை வீட்டுக்கும் அழைத்துப்போய்ச் சாப்பாடும் போட்டான். சாப்பாடு போட்ட திம்மனுக்கு அவர்கள் ஏதாவது போடவேண்டுமே, சுதரிசன் சிங்கு, திம்மன் மனைவி சுப்பம்மாவின் மேல் கண்ணைப் போட்டான். திரைகளைத் தோப்பில் கட்டி வந்தோம்! அவைகளைப் போய்ப் பார்த்து வா என்கிறார்கள் வடக்கர். போகிறான் திம்மன். தன் உள்ளத்தைச் சுப்பம்மாவிடம் சிறிது அவிழ்க்கின்றான் சுதரிசன். செல்லவில்லை. இவன் போக்கிரித்தனத்தை அவள் அறிந்துகொண்டதுதான் இவன் கண்ட பலன்.

6

6