பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பம்மாவை அடைய வழி தேடினான் சுதரிசன். அவன் திம்மனிடம் தனியாக, உன்னைச் செஞ்சிக் கோட்டையில் சிப்பாயாக்கி வைக்கிறேன் என்று ஆசை காட்டுகிறான். திம்மன் அந்த ஆசையில் வீழ்கிறான். திம்மனும் சுப்பம்மாவும் ஏறிய கட்டை வண்டி செஞ்சி நோக்கிச் செல்கிறது. சுதரிசன் சிங்கும் குதிரை மேல் செல்லுகிறான் வண்டியை ஒட்டி. நடுவழி! நல்ல இருட்டு; யாரோ சிலர் வண்டியை நோக்கி வருவதாகச் சுதரிசனுக்கு ஓர் அச்சம் பிறக்கிறது. அவ்வளவு தான் அவன் குதிரை பறக்கிறது. வந்தவரால் வண்டி நிறுத்தப்படுகிறது. யார் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்கிறார்கள் வந்தவர்கள். உண்மை கூறுகிறான் திம்மன். வந்த தமிழர்கள், வடக்கர் தீச் செயலைக் கூறிப், போவது தன்மானத்துக்கே இழிவாகும் என்று தடுக்கக், கேட்கவில்லை திம்மன். ஆயினும் நீ ஒரு தமிழன் என்பதை மறக்காதே; விழிப்போடு நடந்துகொள் என்று விடுகிறார்கள். இதை எல்லாம் கேட்டிருந்த சுப்பம்மா அண்ணன்மாரே எனக்கொரு கத்தி கொடுங்கள் என்று கேட்கிறாள். வியப்பு! அவளை வாழ்த்தி ஒரு குத்துக் கத்தி கொடுத்து அனுப்பு கிறார்கள். செஞ்சியில் ஒரு சேரியின் குடிசையில் சுப்பம்மாவை, குப்பு முருகி ஆகிய இரு தீய மாதர்களுடன் விட்டுத் திம்மனுக்குப் பொய்யுடை ஒன்று தந்து கோட்டையில் ஒரு மூலையில் அடைத்துவிட்டுக் குடிசையில் சுப்பம்மாவிடம் தன் விருப்பத் தினைக் காட்டினான். அவள் ஒப்புகின்றவள் இல்லை என்று கண்டு அன்றிரவு அவளிருந்த குடிசையைக் கொளுத்திவிட்டு, அவள் உள்ளே திண்டாடும்போது உருத்தெரியாமல் அவளை நெருங்கித் தொடுகிறான். சுப்பம்மாவின் கத்தி, தொட்ட கையை விலக்கி விடுகிறது. சுதரிசன் கூட்டம் மறைகிறது.

7

7