பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பம்மா சேரியில் அடைக்கலம் புகச், சேரி முதியோன் செங்கான் வீடு தந்து இருக்கச் செய்கிறான். மறுநாள் இரவு சுதரிசன் எண்ணப்படி குப்பும் முருகியும் செங்கான் வழியாக நஞ்சிட்ட உணவை அனுப்புகிறார்கள். இதை அறியாத செங்கான் அவ்வுணவைச் சுப்பம்மாவிடம் வைத்துச் செல்லுகிறான். சுப்பம்மா உண்டு மயங்கி வீழ்கிறாள். பதிவிருந்த சுதரிசன் உள்ளே புகுந்து, சுப்பம்மாவின் கற்பைத் கெடுத்துச் செல்லுகிறான். கண் விழித்த சுப்பம்மா கற்பிழந்ததை உணர்ந்து செங்கானையும் கேட்டுத் தெளிந்து சுதரிசன் எங்கே என்று கத்தியைத் தூக்கி ஓடச், செங்கான் உடன் ஓடுகிறான். சேரி ஓடுகிறது, மனந் தாளாமல். கதவைத் தட்டினாள் சுப்பம்மா. திறந்துகொண்டு வெளிவந்த சுதரிசனின் மார்பில் சுப்பம்மா குத்துக் கத்தி புதைகிறது. புதைந்தபடி சாவில் புதைகிறான் சுதரிசன். அதே நேரத்தில் அங்கு ஒருபுறம் இருந்த குப்பு முருகி செங்கான் கொடுவாளால் செத்தொழிகிறார்கள். அத்தான் அத்தான் என்று கூவியபடி சுப்பம்மா கோட்டை யிற் புகுந்து கூவுகிறாள். பயனில்லை. திரும்புகிறாள். செங்கானும் சுப்பம்மாவும் ஓர் ஆலின் நிழலில் தங்கியிருக் கிறார்கள், திம்மனைப் பார்க்கும் ஆசையால். கொலைச் செய்தி பரவுகிறது. தேசிங்கு குதித்தோடி வந்து சுதரிசன் உடலண்டை நின்று அங்குச் சேர்ந்த கூட்டத்தினரை நோக்கி யார் செய்தார் என்று உசாவுகிறான். அங்கிருந்த ரஞ்சித் சிங்கு தனக்குத் தெரிந்த வரைக்கும் சொல்லி முடிக்கிறான். எங்கே அந்தத் திம்மன் பெண்டாட்டி, என்று அதிர்ந்தான் மன்னன். அதன் பிறகு எங்கே அந்தத் திம்மன் என்றான். நான்தான் என்று எதிர் வந்தான் திம்மன்.

8

8