பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"படித்திட வேண்டும் நீங்கள்;
பலதொழில் உணர வேண்டும்;
படித்திடில் உணவுப் பஞ்சம்
படிப்படி யாக நீங்கும் ;
படித்திடில் 'சாதி’ப் பேச்சுப்
பறந்திடும்; அறிவும் உண்டாம்;
படித்திடில் 'அடிமை ஆண்டான்'
எனும்பேச்சும் பறக்கும் அன்றோ?43

"கொடுமையைக் கண்டால் ஆண்பெண்
குறுக்கிட வேண்டும் கூட்டாய்;
நடுநிலை மனத்த ராகி
நன்றுதீ(து) உணர வேண்டும்;
உடையவர் இல்லார் என்ற
ஒருபேச்சுக்(கு) இடமில் லாது
குடியினைச் செய்து சேரிக்
குழுவொன்றாய் வாழ வேண்டும்!44

"இவைகளே சீர்தி ருத்தம்!
இதிலென்ன பிழைநீர் கண்டீர்?
பகைவரை எதிர்ப்ப தற்கும்,
பண்பொடு வாழ்வ தற்கும்,
இவைவேண்டும்; ஊரார் எல்லாம்
இதிலொன்றும் பிழையே காணார்;
சுமைவேண்டாம் உங்க ளுக்குத் ;
தொண்டுநான் செய்வேன்!" என்றாள். 45

‌‌

17