பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"முதலியார் வீட்டுப் பெண்னாள்
தமிழச்சி முனைந்த வர்க்கு
விதவித மாக ஏதோ
விளக்கங்கள் செய்கின் றாளாம் !
கதைபல சொல்கின் றாளாம் !
கல்விகற் பிக்கின் றாளாம் !
இதுவென்ன கொடுமை ஐயா?
இப்போதே கிள்ள வேண்டும் ! 74

"'கூலியை உயர்த்திக் கேட்போம் ;
கொடுத்திட மறுத்தால், யாரும்
வேலைக்குப் போக மாட்டோம் ;
வீரன்சொல் கேட்போம் !' என்று
மாலையில் கூட்டம் போட்டு
வாக்குகள் கொடுத்திட் டாராம் !
காலத்தைத் தாழ்த்த வேண்டாம் ;
கவனிக்க வேண்டும்!" என்றார். 75

நாட்டாண்மைக் காரர் சொல்வார்:
"நாமதில் நேரே சென்று
மாட்டக்கூ டாது; சற்று
மறைவாகக் காலம் நோக்கித்
தீட்டிட வேண்டும்! வேறு
செய்வதில் பயனே இல்லை!
வாட்டத்தைப் போக்கிக் கொள்வீர்!
வருமொரு நல்ல காலம்! 76

30